Paristamil Navigation Paristamil advert login

25 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த பிரெஞ்சு திரைப்படம்! - திரைக்கு வருகிறது...!!

25 ஆண்டுகளாக தடை செய்யப்பட்டிருந்த பிரெஞ்சு திரைப்படம்! - திரைக்கு வருகிறது...!!

8 ஆடி 2025 செவ்வாய் 20:06 | பார்வைகள் : 1508


கடந்த 2000 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பிரெஞ்சு திரைப்படம் ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி, வெளியிடுவதற்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இறுதியாக 25 வருடங்களின் பின்னர் அத்திரைப்படம் வெளியாக உள்ளது.

Baise-moi  எனும் அத்திரைப்படம், அதே தலைப்பில் எழுதப்பட்ட நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது. போதைப்பொருளை உட்கொண்ட Manu மற்றும் Nadja எனும் இரு பெண்கள் கொலை வெறி தூண்டப்பட்டு பெரும் பழிவாங்கலில் ஈடுபடும் இந்த கதை சமூக விரோத நடத்தைகள் அதிகம் நிறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு திரையிட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

நிறைந்த பாலியல் காட்சிகளும், வன்முறைகளும், ஆபாசங்களும் நிறைந்துள்ளன. 

தற்போது 25 ஆண்டுகளின் பின்னர், அத்திரைப்படம் மீண்டும் தணிக்கை குழுவுக்கு அனுப்பட்டுள்ளது. தணிக்கை பெறப்பட்டதன் பின்னர் திரையிடப்படும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்