Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவில் முக்கிய அமைச்சரை பதவிநீக்கம் செய்த புடின்!

ரஷ்யாவில் முக்கிய அமைச்சரை பதவிநீக்கம் செய்த புடின்!

7 ஆடி 2025 திங்கள் 17:04 | பார்வைகள் : 1175


ரஷ்யாவில் போக்குவரத்து அமைச்சரை ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவிநீக்கம் செய்தார்.

குர்ஸ்க் பிராந்தியத்தில் எல்லைப் பாதுகாப்பு தோல்விகள் தொடர்பாக பல உயர்மட்ட கைதுகள் அரங்கேறியது.

இந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவொயிட்டை ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) பதவிநீக்கம் செய்துள்ளார்.

கிரெம்ளினின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியிடப்பட்ட ஆணையின்படி, நியமிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே ரோமன் ஸ்டாரோவொயிட் நீக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக இந்த ஆணை அமுலுக்கு வந்தது. 

ஆனால், ரோமனை நீக்கியதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. அவருக்கு பதிலாக துணை போக்குவரத்து அமைச்சர் ஆண்ட்ரி நிகிடின் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

பதவிநீக்கம் செய்யப்பட்ட ரோமன் ஸ்டாரோவொயிட்(Roman Starovoit), 2018 முதல் 2024ஆம் ஆண்டுவரை உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தென்மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தின் ஆளுநராகப் பணியாற்றினார்.

ஆனால், 2023ஆம் ஆண்டு ஆகத்து மாதம் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் எதிர்பாராத விதமாக ஊடுருவியதைத் தொடர்ந்து, ஆளுநராக இருந்த ஸ்டாரோவொயிட்டின் பதவிக்காலம் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்