Paristamil Navigation Paristamil advert login

சிறைகளாக மாறுமா முதியோர் இல்லங்களும் மற்றும் விடுமுறை மையங்களும்??

சிறைகளாக மாறுமா முதியோர் இல்லங்களும் மற்றும் விடுமுறை மையங்களும்??

5 ஆடி 2025 சனி 17:30 | பார்வைகள் : 3082


அதிகரித்து வரும் குற்றவாளிகளின் பிரச்சனையை எதிர்க்க, நீதித் துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் (Gérald Darmanin), மூடப்பட்ட முதியோர் இல்லங்கள், விடுமுறை மையங்கள் மற்றும் ஹோட்டல்களை சிறைகளாக மாற்றும் திட்டத்தை முன் மொழிந்துள்ளார்.

குறைந்த ஆபத்துள்ள குற்றவாளிகளை இவ்வகை இடங்களில் வைக்க திட்டமிட்டுள்ள அரசு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்காக உயர்தர பாதுகாப்பு சிறை ஒன்றை ஜூலை 31 அன்று வெந்தின்-லு-வியலில் Vendin-le-Vieil (Pas-de-Calais) திறக்கவுள்ளது.

ஜெரால்ட் தர்மனின் கூறுகையில், குற்றவாளிகளை வேறுபடுத்தி நிர்வகிக்க வேண்டும் என்றும், சிறிய குற்றங்களில் ஈடுபடுவோர், தீவிரவாதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஆகியோரை ஒன்றாக வைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 

விரைவில் குறைந்த செலவில் புதிய சிறைச்சாலை  கட்டப்படும் என்றும், ஒரு இடத்திற்கு 200,000 யூரோக்கள் செலவில் 18 மாதங்களில் புதிய சிறைகள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்