ஸ்தெபான் பிளாசா - நான் நிரபராதி - அரசிற்குச் சவால்!
5 ஆனி 2025 வியாழன் 23:08 | பார்வைகள் : 4033
2025 பிப்ரவரியில், பிரபல வீட்டு விற்பனையாளரும் வானொலி புகழ் நிகழ்ச்சியாளருமான ஸ்தெபான் பிளாசா (Stéphane Plaza) முன்னாள் தோழிக்கு உடல் மற்றும் உளவியல் வன்முறை செய்ததாகணகூறி ஒரு வருடம் சிறைத் தண்டனை பெற்றார்.
ஆனால் 2025 ஜூன் 5 அன்று அவர் நீதிகேடு மீண்டும் வழக்கை ஆரம்பித்துள்ளதாக ஊடகங்கள் முன் கூறியுள்ளார்.
'பரிஸ் அரசு வழக்கறிஞர்கள் வழக்கை போலியாக நடத்தினர் – இது நீதியின் தோல்வி.' எனத் தெரிவித்துள்ளார் ஸ்தெபான் பிளாசா
சைபர் துன்புறுத்தல் வழக்கை முற்றாக மறைத்ததாக குற்றச்சாட்டு
ஸ்தெபான் பிளாசா 2023ல், சில முன்னாள் தோழிகள் இணையத்தில் துன்புறுத்தியதாக புகார் கொடுத்திருந்தார்.
அதில் ஒருவர், பல போலி கணக்குகளிலிருந்து பிளாசாவின் சுற்றத்தாருக்கு செய்திகளை அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், இந்த முக்கியமான தகவல்கள் இவரிற்கொதிரான வன்முறை வழக்கில் சேர்க்கப்படவில்லை, என அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
நான் எவரையும் தாக்கவில்லை
நான் நிரபராதி. நீதிமன்றத்தில் என் வழக்கு முழுமையாக விசாரணை செய்யப்படவில்லை
அரசு வழக்கறிஞர் அலுவலகம் தப்பாக நடந்தது. இது ஒரு பெரிய நீதிகேடு
என ஸ்தெபான் பிளாசா தெரிவித்துள்ளார்.
பிளாசாவின் வழக்கறிஞர்கள், நீதித்துறையின் தவறுகள் காரணமாக நேரடியாக அரசை நீதிமன்றத்தில் வழக்குக்குள் இழுத்துள்ளனர்.
'வழக்கை மீண்டும் விசாரிப்பது போதாது. அரசின் பொறுப்பு நிரூபிக்க வேண்டியது முக்கியம்.' என இவரின் வழக்கறிஞர்கள் அரசிற்கு சவால் விட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan