PUGET-SUR-ARGENS இல் நடந்த படுகொலை - இதுவரை தெரிந்த தகவல்கள்
5 ஆனி 2025 வியாழன் 15:27 | பார்வைகள் : 3357
சனிக்கிழமை மே 31 அன்று, வார் (VAR) மாவட்டத்தின் ப்யூஜே-சூர்-அர்ஜோனில் ( PUGET-SUR-ARGENS) ஒரு மனிதர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார். இன்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் அவரது மனைவியின் புகாரின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இது இனவெறி அடிப்படையிலான குற்றம் எனும் கோணத்தில் விசாரணைகள் தற்போது நடக்கிறது.
கொல்லப்பட்டவர்: 35 வயது, துனிசியப் பிரஜை.
காயமடைந்தவர்: 25 வயது, துருக்கிய பின்புலம் உடையவர்,
ஜோந்தாமரியின் அதிரடிப்படையான GIGN இனால் குற்றவாளி ORANGE இல் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்போது, அவரது வாகனத்தில் இயந்திரத்துப்பாக்கிகள் மற்றும் கைத்தப்பாக்கிகள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சமீபத்தில், அவரது மனைவி காவல்துறைக்கு அழைத்து, அவரது கணவர் அயவலர் ஒருவரைச் சுட்டு விட்டதாக தகவல் வழங்கினார். அவர் வழங்கிய மேலதிகத் தகவல்களின் அடிப்படையிலேயே குற்றவாளி தேடப்பட்டு பின்னர் சில நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளான். அவரது மனைவி, புறநகரில் உள்ள அவர்களின் குடியிருப்பில் பல வெளிநாட்டு மக்கள் இருப்பதால், அவர்கள் மீது தன் கணவர் கடும் கோபத்தில் இருந்ததாகக் கூறியுள்ளார்.
தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (PNAT) இந்த விசாரணையைப் பொறுப்பேற்றது.
PNAT, இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பித்ததும் தீவிர வரதுசாரிக் கருத்துக்களும் காணொளிகளும் கிடைத்தன. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னும் பின்னரும் வெளியிடப்பட்ட காணொளிகள், இது வெறும் தனிநபர் இனவெறி தாக்குதல் அல்ல என்பதை நிரூபித்துள்ளன.
விசாரணை ஆதாரங்களின்படி, இந்தக் காணொளிகளில்:
பொதுவான எதிர்ப்பு மற்றும் வெறுப்பு பேச்சுகள்
மூலதனவாத, வெளிநாட்டவரிற்கு எதிரான கருத்துகள்
இனவிரோதம் முக்கியமாக இஸ்லாமிய விரோதம் மற்றும் வெறுப்பணர்வு
என்பனவற்றுடன் மேலும் இவற்றில் பயங்கரவாதத் தூண்டல்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவாளியான 53 வயதுடைய கிறிஸ்தோப் பி. (Christophe B.) இணையத்தில் இனவெறி மற்றும் வெறுப்புத் தூண்டும் காணொளிகளை வெளியிட்டுள்ளார். துப்பாக்கி பயிற்சியும் மேற்கொண்டுள்னார். இவர் பற்றிய எந்தப் பதிவுகளும் இதுவரை காவற்துறையினரிடம் இருந்து இருக்கவில்லை என்பது அதிர்சிக்குரியது.
அரசியற் களத்தில் இந்தக் கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் இஸ்லாமியவாதமும் பேசி உள்ளனர்.
இவற்றையெல்லாம் தாண்டி பயங்கரவாதத் தடைப்பிரிவு விசாரணையை விரைவாக்கி உள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan