காசாவிற்காக ஒரு நிமிட அஞ்சலி - ஆசிரியை பதவி நீக்கம்!!
5 ஆனி 2025 வியாழன் 13:17 | பார்வைகள் : 8140
கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன், வியாழக்கிழமையில், Yonne மாகாணத்தில் உள்ள சோன் (Sens - Yonne) நகரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியின் இயற்பியல்-வேதியியல (physique-chimie) ஆசிரியை, வகுப்பில் காசா பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியாக ஒரு நிகழ்வை நடத்தியதற்காக இடை பதவி நீக்கம் செய்துள்ளார்.

இந்த வழக்கில் இது ஒரு முக்கியமான அரசியல் நிலைப்பாடு. இந்த ஜூன் 5ஆம் தேதி வியாழக்கிழமை, எலிசபெத் போர்ன், சோன் நகரில் உள்ள ஜானோ-க்யூரி (lycée Janot-Curie) மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல்-வேதியியல் ஆசிரியையை நான்கு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யும் வகையில் கல்வித் திணைக்களம் எடுத்த தீர்மானம் குறித்து ஒரு ஊடகம் எலிசபெத் போர்னிடம் கேட்கப்பட்டபோது, 'இவர், ஆசிரியர்களிற்கான பொதுநெடுநிலை விதிமுறையை மீறியுள்ளார்' என்று தெரிவித்துள்ளார்.
அந்த ஆசிரியை வகுப்பில் காசா பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியாக ஒரு நிமிட மவுனம் கடைப்பிடித்ததற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன், அந்த ஆசிரியை தவறு செய்தாரா என்பதை தெளிவாகச் சொல்ல விரும்பவில்லை. இருந்தாலும், அவர் 'எமது ஆசிரியர்களுக்குப் பொருந்தும் நடுநிலை விதிமுறையை மீறியுள்ளார்' என்று கூறினார். 'இஸ்ரேல்-பாலஸ்தீனிய விவகாரத்தைப் பற்றி பேசுவது ஒரு விடயம். ஆனால் அதில் அரசியல் நிலைப்பாடு எடுத்துக்கொள்வது வேறு விடயம். இங்கு எமது ஆசிரியர்களுக்கு ஒரு பொறுப்புணர்வும் சம நிலையாக இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது' என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த நிலைப்பாட்டை திஜோன் (Dijon)கல்வித்திணைக்களமும் பகிர்ந்துள்ளது. அந்த ஆசிரியை 'தன் நடுநிலை கடமையை தவிர்த்துள்ளார்' எனவும், அந்த மவுனம் கடைப்பிடிக்கும் நடவடிக்கையின் பொறுப்பாளர் அவரே என்பதைக் கருதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த கூற்றை பல தொழிற்சங்கங்கள் எதிர்த்து, அந்த ஆசிரியை சார்பாக வாதிட்டுள்ளன. அவர்கள் கூறுவதாவது, அந்த ஒரு நிமிட மவுனம் கடைப்பிடிப்பது மாணவர்கள் எடுத்த முயற்சி, அது இடைவேளையின் போது நடந்தது, மேலும் எந்த மாணவரும் அதில் பங்கேற்க கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதாகும்.
ஆனாலும் இந்த விடயத்தில் கல்வி அமைச்சர் எலிசபெத் போர்ன் மிகவும் கண்டிப்பான முடிவுடன் உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan