ஆப்கானிஸ்தானில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
5 ஆனி 2025 வியாழன் 09:08 | பார்வைகள் : 3033
ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பழங்குடியின மக்கள் அதிகம் வாழும், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின், தட்டா கெல் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், கடந்த ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், அந்நாட்டு வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது உறுதியானதால் அவர்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் தங்களது நாட்டை விட்டு பயங்கராவத்தை முற்றிலும் அழிக்கத் தயாராகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan