Paristamil Navigation Paristamil advert login

ஓய்வூதிய வயது உயர்வு: அரசியலில் மீண்டும் பரபரப்பு!

ஓய்வூதிய வயது உயர்வு:  அரசியலில் மீண்டும் பரபரப்பு!

4 ஆனி 2025 புதன் 22:45 | பார்வைகள் : 5252


2023ஆம் ஆண்டில் 49.3 சட்டத்தின் மூலம் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்ய கோரி, இடதுசாரி கட்சிகார அமைச்சர்கள் பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை வியாழக்கிழமை, யூன் 5 முன்வைக்க உள்ளார்கள். 

இந்த தீர்மானம் சட்ட சிக்கலின்றி அரசின் மீது அரசியல் அழுத்தம் கொடுக்கவே முயற்சிக்கிறது. முக்கியமாக, ஓய்வூதிய வயதை 64 ஆக உயர்த்தியதும், பங்களிப்பு காலத்தை அதிகரித்ததுமான இரு அம்சங்களையும் ரத்து செய்யவே தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. RN கட்சியும்  இதற்கு ஆதரவு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த தீர்மானம் முதன்முறையாக ஓய்வூதியச் சட்டத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தும் தருணமாகும். இது பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டால், அரசாங்கத்தின் மீது அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொழிற்சங்கங்கள், குறிப்பாக CGT, நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டங்களை நடத்துகின்றன. இருப்பினும், இந்த தீர்மானம் சட்டமாக மாற்ற முடியாது என்றாலும், அரசியல் ரீதியாக அது ஒரு வலுவான அழுத்தமாக அமையும் என அரச தரப்பினர் நம்புகிறார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்