ஆயா நகாமுரா பிரஞ்சு நாகரிகத்தை அச்சுறுத்துவதாக குற்றச்சாட்டு!
4 ஆனி 2025 புதன் 19:10 | பார்வைகள் : 8531
2024 மார்ச், பரிஸ் ஒலிம்பிக் விழாவிற்கு முன், புகழ்பெற்ற பிரஞ்சு-மாலியப் பாடகியான ஆயா நகமுராவை (Aya Nakamura) இழிவுப்படுத்தும் வகையில், இனவெறி கருப்பொருளுடைய பதாகையை விநியோகித்த 13 பேர் மீது, 2025 ஜூன் 4ஆம் திகதி, பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இந்த பதாகையில், “இது பரிஸ்; பமாக்கோ சந்தை இல்லை, ஆயா!” என்று எழுதப்பட்டிருந்தது. இது, உலகளவில் பிரசித்தி பெற்ற ‘Djadja’ எனும் பாடலைக் குறிக்கும் வகையில், அவமானமாக சொல்லப்பட்ட கருத்தாகும். ஆயா நகமுரா, ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் இந்த பாடலைப் பாட முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த செயல் மிகவும் கவலைக்குரியதாக அமைந்தது.
இந்த செயல் இனத்தின் அடிப்படையில் வெறுப்பூட்டும் நடவடிக்கையாக இருக்கிறது எனக் குற்றம்சாட்டப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த 13 பேரில், Les Natifs இயக்க உறுப்பினர்கள், முன்னணி நியோநாசி (néonazie) தலைவரின் சகோதரி மற்றும் மூன்று RN நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியாளர் ஒருவரும் அடங்குவர்.
அவர்கள் "ஐரோப்பிய நாகரீகத்தை பாதுகாப்பது" என்றும் "பெரிய மாற்றம்" எனப்படும் இனமாற்ற சதித்திட்டத்திற்கு எதிராக போராடுவதாக கூறி தங்களுக்கான நீதியை கேட்டுள்ளனர்.
அவர்கள் மேற்கொண்ட செயல் கருத்து சுதந்திரமா? அல்லது இனவெறி குற்றமா? என்பது பற்றி வழக்கு நடைபெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan