18 ஆண்டு காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் படை
4 ஆனி 2025 புதன் 06:06 | பார்வைகள் : 2110
ஐ.பி.எல் 2025 இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று 18 ஆண்டு காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது பெங்களூரு அணி.
18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாட்டம் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ஓட்டங்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
191 ஓட்டங்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் பஞ்சாபின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியன்ஷ் ஆர்யா களமிறங்கினர்.
இதில் பிரியன்ஷ் ஆர்யா 24 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் சிங் 26 ஓட்டங்கலிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இங்கிலிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 39 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து இளம் வீரர்களான நேஹல் வதேரா மற்றும் ஷஷாங் சிங் ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் நிதானமாக ஆடி ஓட்டங்கள் சேர்த்தனர். இதில் வதேரா 15 ஓட்டங்கலிலும், அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 6 ஓட்டங்களிலும், ஓமர்சாய் 1 ஓட்டத்திலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ஓட்டங்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan