இலங்கையில் பகிடிவதை தாங்க முடியாமல் வாவியில் குதித்த மாணவி
3 ஆனி 2025 செவ்வாய் 17:27 | பார்வைகள் : 2195
குளியாப்பிட்டி, தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், கல்லூரிக்கு அருகில் உள்ள வாவியில் குதித்துள்ளதுடன், பிரதேசவாசிகளால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் நிலை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மாணவியை பகிடிவதை செய்ததாகக் கூறப்படும் மூன்று மாணவர்கள் மற்றும் , ஒரு மாணவி வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக குளியாப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டி தொழில்நுட்ப கல்லூரியில் இது வரை இவ்வாறான சம்பவங்கள் பதிவானதில்லை எனவும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவி வாவியில் குதிப்பதற்கு முன்பு தொழில்நுட்ப கல்லூரியின் ஆசிரியரொருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan