அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவின்போது துப்பாக்கிச்சூடு

2 ஆனி 2025 திங்கள் 10:37 | பார்வைகள் : 3218
அமெரிக்காவின் மினசோட்டாவில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Minneapolis நகரில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில் Wayzata உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பு விழா நடந்தது.
அப்போது பல்கலைக்கழக வளாகத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியது. இதில் 19 வயது இளைஞர், 49 வயது நபர் என இருவர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சந்தேக நபர் ஒருவர் காவலில் எடுக்கப்பட்டார். ஆனால் சந்தேக நபரின் அடையாளம் காவல்துறையினரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
Wayzata பொதுப்பள்ளிகள் கண்காணிப்பாளர் சேஸ் ஆண்டர்சன் வெளியிட்ட அறிக்கையில், "இந்த சம்பவம் ஒரு மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால் முடிவில் நடந்தது குறித்து மிகவும் வருத்தமடைந்துள்ளோம்.
இந்த துயரமான நிகழ்வால் நேரடியாக பாதிக்கப்பட்ட Wayzata குடும்பங்கள் மற்றும் மற்றவர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன. சட்ட அமலாக்கத்துடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம், மேலும் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்" என தெரிவித்தார்.
இதற்கிடையில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட இருவரும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விட்டதாக மினசோட்டா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1