உலகஅழகிப் போட்டியில் 4வது இடத்தை பிடித்த பிரான்ஸ் அழகி!!!!
1 ஆனி 2025 ஞாயிறு 17:20 | பார்வைகள் : 3425
2025ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியில் மார்டினிக்கை சேர்ந்த ஒரேலி ஜோஆசிம் (Aurélie Joachim), மே 31 சனிக்கிழமை இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பிரான்ஸை பிரதிநிதித்துவப்படுத்திய அகாத் கோயே (Agathe Cauet) முன்னிலைப் பட்டியலில் சேராமல் வெளியேறிய நிலையில், மிஸ் பிரான்ஸ் அமைப்பிலிருந்து தனித்துவமாக மார்டினிக்கை சேர்ந்த ஒரேலி, உலக அரங்கில் பிரகாசித்துள்ளார்.
1997 பிப்ரவரி 10ஆம் திகதி மார்டினிக்கின் டூக்கோஸில் (Ducos) பிறந்த, 27 வயதான ஒரேலி, சமூகப்பணி மற்றும் இளம் தலைமுறையின் மனநலனில் அக்கறை காட்டி வருகிறார். தனது ‘Maison Lanmou’ அமைப்பின் மூலம், மக்கள் பேசுவதை கேட்பதற்கு பாதுகாப்பான இடங்களை உருவாக்குதல் போன்ற சமூகப்பணிகளில் ஈடுபாடு காட்டி வருகிறார்.
நீளம் தாண்டுதல், மலையேறுதல், புகைப்படக்கலை, வரைகலை, இசை, நடனம் போன்ற பல கலைகளில் ஈடுபாடுள்ளவர். தனது Creola என்ற மகளிர் இதழின் ஆடை கலை இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan