இலங்கையை அச்சுறுத்திய காலநிலை - 10,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
1 ஆனி 2025 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 9329
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று நடவடிக்கை எடுத்தது.
காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலகா தெரிவித்துள்ளார்.
வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு மேலதிகமாக, அனர்த்தங்களால் காயமடைந்தவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என மேலும் தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan