நோந்த் - 19 வயது பெண் சாலையிலேயே கத்திக் குத்து!

31 வைகாசி 2025 சனி 14:17 | பார்வைகள் : 5312
2025 மே 29ம் தேதி வியாழக்கிழமை, நாந்த் நகரில் ஒரு 19 வயது இளம்பெண், அவளது முன்னாள் காதலனால், சாலையிலேயே வைத்துப் கத்தியால் பலமுறை குத்தப்பட்டுள்ளார். சம்பவம் மலாகொஃப் பகுதியில் உள்ள பூங்கா அருகே மாலை நேரத்தில் நடந்துள்ளது.
இநெ;த இளம்பெண், தனக்கு எதிராக தாக்குதல் முயற்சிகள் நடப்பதாக காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்திருந்தார். கைது செய்யப்பட்ட இந்த 18 வயதுக் குற்வாளி நீதிமன்ற நடவடிக்கை எதுவுமின்றி காவற்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
காவற்துறையின் இந்தத் தவறே இந்தக் கொடூர கொலைத் தாக்குதலிற்கு வழி வகுத்துள்ளது.
படுகாயமடைந்த பெண் நோந்த் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிர் ஆபத்தில் இல்லை என மருத்துவமனையினர் தெரிவித்தனர்.
தப்பியோடியுள்ள தாக்குதலாளி 'கொலை முயற்சி' குற்றச்சாட்டில் காவற்துறையினரால் தேடப்பட்டு வருகின்றான். சம்பவத்தின் சாட்சிகள் சிலர் தாக்குதலைத் தடுக்க முயற்சித்துள்ளனர், ஆனாலும்; தடுத்து இருக்க முடியவில்லை.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1