Paristamil Navigation Paristamil advert login

20 வயது வீரரை "வாட்டர் பாய்" என கிண்டலடித்த விராட் கோஹ்லி….

20 வயது வீரரை "வாட்டர் பாய்" என கிண்டலடித்த விராட் கோஹ்லி….

31 வைகாசி 2025 சனி 06:31 | பார்வைகள் : 3877


பஞ்சாப் கிங்ஸ் வீரர் முஷீர் கான் துடுப்பாட்டம் செய்ய வரும்போது "வாட்டர் பாய்" என விராட் கோஹ்லி கூறியது சர்ச்சையாகியுள்ளது.

ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 101 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர் ஆடிய பெங்களூரு அணி 10 ஓவர்களில் 102 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான இளம்வீரர் முஷீர் கான் (20) துடுப்பாட்டம் செய்ய வந்தார்.

அப்போது ஸ்லிப் பகுதியில் ஃபீல்டிங்கில் நின்றிருந்த விராட் கோஹ்லி, "வாட்டர் பாய்" என்று முஷீர் கானை கிண்டலடித்ததாக செய்ததாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரசிகர்களை இதனைக் குறிப்பிட்டு கோஹ்லியை வசைபாடி வருகின்றனர். ஆனால், உண்மையில் கோஹ்லி அவ்வாறு செய்தாரா என்பது தெளிவாகவில்லை.

முன்னதாக, 2 ஓவர்கள் பந்துவீசிய முஷீர் கான் (Musheer Khan) 27 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து, மயங்க் அகர்வாலின் விக்கெட்டைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்