Paristamil Navigation Paristamil advert login

RSA ரத்தும் வேலை தேடுபவர்களுக்கு புதிய கண்காணிப்பு விதிகளும்!!

RSA ரத்தும் வேலை தேடுபவர்களுக்கு புதிய கண்காணிப்பு விதிகளும்!!

30 வைகாசி 2025 வெள்ளி 15:30 | பார்வைகள் : 5011


2025 ஜனவரி 1 முதல் RSA பெறுபவர்கள் வாரத்திற்கு 15 முதல் 20 மணி நேரம் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டிய கட்டாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். 

இந்த ஒப்பந்தத்தை மீறினால், ஜூன் 1 முதல் தண்டனைகள் அமுலுக்கு வரும். இதில், RSA தொகையை தற்காலிகமாக நிறுத்துவது அல்லது முற்றிலுமாக ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும்.

இதேபோல், ஜூன் 1 முதல், வேலையில்லாதவர்களின் வேலை தேடல்களைக் கண்காணிப்பதற்கான ஒரு புதிய அமைப்பு  France Travailஇனால் செயல்படுத்தப்பட்டு, எட்டு பிராந்தியங்களில் சோதிக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

வேலையில்லா நபர்களின் (le chômeur) வேலை தேடும் முயற்சிகளை பரிசீலிக்க அவர்களை நேரில் அழைப்பது கட்டாயமில்லை. எனினும் அதிகாரி, தரவுகளின் அடிப்படையில் நேரில் அழைப்பு இல்லாமலேயே முடிவெடுக்கலாம். 

மேலும், ஒரு ஆலோசகருடன் ஒரு நேர்காணலில் முன்னறிவிப்பு இல்லாமல் கலந்து கொள்ளத் தவறினால்  அவரது தனிப்பட்ட சூழ்நிலையைப் பொருட்படுத்தி தண்டனை வழங்கப்படும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்