அனைத்து உதவிகளையும் விடுவிக்க வேண்டும்!' - இஸ்ரேலுக்கு மக்ரோன் கடுமையான எச்சரிக்கை!! '
30 வைகாசி 2025 வெள்ளி 15:06 | பார்வைகள் : 8818
"காஸா மக்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அனைத்து மனிதாபிமான உணவுகளையும் உடனடியாக வழங்கவேண்டும். ஒருசில மணிநேரத்தில் இஸ்ரேல் பதிலளிக்க வேண்டும்' என பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மிகவும் காட்டமாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மக்ரோன் அங்கு வைத்தே இதனைத் தெரிவித்தார்.
"உணவுத் தட்டுப்பாட்டு அவலங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. உடனடியாக இஸ்ரேல் உணவு விநியோக தடைகளை நீக்கவேண்டும். வரும் மணிநேரங்களில் எந்த பதிலும் இல்லை என்றால், நாம் நமது கூட்டு நிலைப்பாட்டை கடினப்படுத்த வேண்டியிருக்கும்" எனவும் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
கடந்த சிலமணிநேரங்களில் உணவுகள் பெற முற்பட்டபோது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவில் பலி எண்ணிக்கை 54,249 ஆக உயர்வடைந்துள்ளது. 123,492 பேர் காயமடைந்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan