ரிஷாப் பண்டின் முடிவு திக்வேஷிற்கு அவமானம் -அஸ்வின்
30 வைகாசி 2025 வெள்ளி 13:02 | பார்வைகள் : 3451
மன்கட் முறை ரன்அவுட்டை பண்ட் திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம் என ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியுற்றது. இப்போட்டியில் திக்வேஷ் ரதி ஓவரில் ஜித்தேஷ் சர்மா 'மன்கட்' முறையில் ரன்அவுட் ஆனது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஆனால், லக்னோ அணித்தலைவர் ரிஷாப் பண்ட் (Rishabh Pant) ரன் அவுட் அப்பீலை முன்பே திரும்பபெற்றுவிட்டார்.
இது திக்வேஷ் உட்பட ரசிகர்கள் என பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
இந்த நிலையில், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த முடிவை விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், "மன்கட் முறையில் செய்த ரன்அவுட் முறையீட்டை ரிஷாப் பண்ட் திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம். அவர் கூனிக் குறுகிப் போயிருப்பார்.
இனி இதுபோல ரன் அவுட் செய்ய முயற்சிக்கமாட்டார்.
ஒரு கேப்டனின் வேலை உண்மையில் ஒரு வீரரை ஆதரிப்பது. ஆனால், அந்த பந்துவீச்சாளரின் முடிவை கோடிக் கணக்கானோர் முன்னிலையில் நிராகரித்துள்ளார்.
அவர்கள் விவாதித்தார்களா என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் கோடிக்கணக்கான மக்கள் முன்னிலையில் அந்த இளைஞனை அவமதிப்பதை நிறுத்துவோம். அது உண்மையில் ஒரு அவமானம்" என தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan