ஜூலை 1 முதல் குழந்தைகள் இருக்கும் இடங்களில் புகைபிடித்தல் தடை!
29 வைகாசி 2025 வியாழன் 19:09 | பார்வைகள் : 9551
பிரான்ஸ் அரசாங்கம் 2025 ஜூலை 1 முதல் கடற்கரை, பூங்கா, பாடசாலை அருகே, விளையாட்டு மைதானங்கள் போன்ற, குழந்தைகள் அதிகம் செல்லும் இடங்களில் சிகரெட் புகைத்தலை தடைசெய்கிறது.
சுகாதார அமைச்சரும், குடும்ப, ஒற்றுமை மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சருமான கதரின் வொத்ரோன் (Catherine Vautrin) தெரிவிக்கும் போது,
«ஒவ்வொரு ஆண்டும், பத்து மரணங்களில் ஒன்று புகையிலையுடன் தொடர்புடையது. பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் 75,000 சாவடைந்துள்ளனர். தினசரி 200 சாவுகள்; ஏற்படுகின்றன. இது தவிர்க்கக்கூடிய சாவுகளில் முதலிடம் வகிக்கிறது»
«குழந்தைகளை பாதுகாக்க இந்த தடைகள் அவசியம்»
குறிப்பாக பள்ளிகளின் சுற்றுப்புறத்தை உள்ளடக்கிய வகையில் அமையும். பெற்றோர் பள்ளிக்கு வரும் பொழுது வெளியே புகைத்தல், அல்லது மாணவர்கள் பள்ளி எல்லைக்குள் புகைத்தல் ஆகியவற்றை தவிர்க்கும் நோக்கமாகவே இந்தத் தடை அமைக்கப்பட்டுள்ளது.
மின் சிகரெட் (e-cigarette) இத்தடைக்கு உட்படாது, ஆனால் தனி நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
«சிறார்கள் சிகரெட் வாங்க முடியாது, ஆனால் புகைபிடிக்கலாம் என்பது அரசாங்கத்தின் முரண்பாடு எதிர்காலத்தில் சிறார்களிற்கு முழுமையான தடை கொண்டு வருவதற்கான சாத்தியங்களும் உள்ளன»
«எனது முழமையான நோக்கம் புகையிலை இல்லாத தலைமுறையை உருவாக்குவது»
என அமைச்சர தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan