நடுவானில் விமானப் பணிப்பெண்ணிடம் சீண்டல் - யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கைது
29 வைகாசி 2025 வியாழன் 12:48 | பார்வைகள் : 3298
டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில், தென்னாபிரிக்காவை சேர்ந்த விமான பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த அவர் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அவர் குறித்த பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றுள்ளார்.
அந்த பெண் உடனடியாக விமானிக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
விமானம் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளின் உதவியுடன் சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், நீர்கொழும்பு சட்டவைத்திய அதிகாரியிடம் பிரசன்னப்படுத்தப்பட்ட போது அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan