பரிசின் முன்னாள் நகரபிதா Jean Tiberi மரணம்!!

27 வைகாசி 2025 செவ்வாய் 11:57 | பார்வைகள் : 2389
பரிசில் முன்னாள் நகரபிதா Jean Tiberi மரணமடைந்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் இருந்து 2000 ஆண்டு வரையான ஐந்து ஆண்டு காலம் அவர் பரிசில் நகரமுதல்வராக கடமையாற்றியிருந்தார்.
"பரிஸ் அவருடைய நகரம். அவருடைய ஒட்டுமொத்த நகரமும் இணைந்து அவருக்கு அஞ்சலி தெரிவிக்கும்!" என பரிஸ் நகரமுதல்வர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார்.
அவரது மறைவை அடுத்து, பரிசில் உள்ள அனைத்து நகரசபைக் கட்டிடங்களில் பறக்கும் கொடிகளும் அரைக்கம்பத்தில் பறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Rassemblement pour la République கட்சியைச் சேர்ந்த அவர், அதே கட்சி சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக 1968 முதல் 1976 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1