வட கொரியாவில் பல உயர் அதிகாரிகளை கைது

26 வைகாசி 2025 திங்கள் 06:51 | பார்வைகள் : 1520
வட கொரியா தனது மிகப்பாரிய போர் கப்பல்களில் ஒன்றை ஏவுவதில் தோல்வியுற்றதை அடுத்து பல உயர் அதிகாரிகளை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடகொரியாவின் மிக முக்கியமான கடற்படை திட்டமாக கருதப்பட்ட 5,000 டன் கொள்ளளவு கொண்ட Choe Hyon வகை destroyer போர் கப்பல், அதன் தொடக்க நாளிலேயே தோல்வியடைந்தது.
மே 21 அன்று Chongjin கப்பல் தயாரிப்பு நிலையத்தில் நடந்த இந்த விபத்தில் கப்பலின் முன்பகுதி முழுமையாக நீரில் இறங்கவில்லை, அதன் ஒரு பகுதி நிலத்தில் இருந்துவிட்டது என செயற்கைக்கோள் படங்கள் உறுதிபடுத்துகின்றன.
இந்த தோல்வியின் பின்னர், கப்பல் துறைமுக தலைமை பொறியாளர், உடலமைப்பு பணிப்பாளர் மற்றும் நிர்வாக துணை மேலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கடற்படையின் நவீனமயமாக்கல் திட்டத்தில் முக்கியக் கட்டமாக இருந்த இந்த போர் கப்பல் தோல்வியடைந்ததை "அறிவியல் அறியாமையால் ஏற்பட்ட குற்றச்செயல்" என வடகொரிய தலைவர் கிம்ஜொங் உன் கூறியுள்ளார்.
தோல்விக்கு பிறகு, வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் KCNA “கப்பல் பாதிப்பின் நிலை குறைவாகவே உள்ளது, கடற்படையில் மீளச் சேர்க்கும் முயற்சிகள் தொடரும்” என அறிவித்தது.
வழக்கமாக வெற்றிப் படங்களைக் காட்சிப்படுத்தும் வடகொரியா, துவக்க நிகழ்வின் எந்த புகைப்படங்களையும் அல்லது வீடியோக்களையும் வெளியிடவில்லை. இது இந்தத் தோல்வியின் பெருமளவைக் காட்டுகிறது.
இந்த போர் கப்பல்கள், ஜப்பானை நோக்கிய கிழக்குப் பகுதி மற்றும் மேற்குக் கரையில் உள்ள மஞ்சள் கடலில் தாக்குதல் திறன்களை அதிகரிக்க வடகொரியா திட்டமிட்டது. தற்போது அந்த திட்டத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1