அபூபகர் சிஸே கொலை வழக்கு – ஒலிவியே B. மன நல மருத்துவமனைக்கு மாற்றம்

22 ஆனி 2025 ஞாயிறு 11:47 | பார்வைகள் : 2309
2024 ஏப்ரலில் GARD பகுதியிலுள்ள மசூதியில் கொலை செய்யப்பட்ட அபூபகர் சிஸே வழக்கில் பிரதான சந்தேகநபராக உள்ள ஒலிவியே B (20 வயது), 2025 ஜூன் 20ஆம் தேதி உயர்ந்த பாதுகாப்புடன் Pyrénées-Orientale மனநல மருத்துவமனைக்குப் (Centre psychiatrique de Thuir) மாற்றப்பட்டுள்ளார்.
ஜோந்தாமரியின் சிறப்பு அதிரடிப்படையான PSIG (Pelotons de surveillance et d’intervention de la gendarmerie) பாதுகாப்புடன் சிறையிலிருந்து மருத்துவ வாகனத்தில் மாற்றப்பட்டுள்ளார்.
மருத்துவர்களும், மனநல நிபுணர்களும் மேற்கொண்ட மீளாய்வின் அடிப்படையில், கடுமையான மனநலப் பிரச்சனை, குறிப்பாக schizophrénie எனும் உளச்சிதைவு நோய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒலிவியே B. இத்தகைய கொடூரத் தன்மை வாய்ந்த கொலைச் செயலுக்கு எந்த மனநிலையுடன் ஈடுபட்டார் என்பது குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
அபூபகர்சிஸ்ஸே, கார்டில் உள்ள மசூதியில் 57 தடவை கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஒலிவியே B. குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், இஸ்லாமியர்களை வெறுக்கும் மனநிலை காரணமாக இச் செயலை செய்தமையை மறுத்துள்ளார்.
இத்தாலியில் விசாரணைகள் செய்யப்பட்ட போதும் இவர் மனநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்தோம் என இத்தாலியில் இவர் சரணடைந்த காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மனச்சிதைவு அடிப்படையிலான வைத்தியம், சட்டத்தின்படி அவரை தற்காலிகமாக சிறைவாசத்திலிருந்து விலக்கி விடுகின்றது (levée d’écrou).
ஆனாலும் இவர் வைத்தியசாலையிலும் கடுமையான பாதுகாப்பிலேயே வைத்திருக்கப்படுவார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1