அகாதே ஹிலரே உயிரிழப்பு - காவல்துறையின் பார்வையில் குற்றச்செயலே!
22 ஆனி 2025 ஞாயிறு 00:10 | பார்வைகள் : 3733
28 வயதான அகாதே ஹிலரே கடந்த ஏப்ரல் 10ம் தேதி விவோன் (Vivonne) அருகே ஜோகிங் ஓட்டம் செல்லும்போது காணாமல் போயிருந்தார். சுமார் ஒரு மாதத் தேடலுக்குப் பிறகு மே 5ஆம் தேதி அவரது உடல் Vienne மாவட்டத்தின் ஒரு காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

தடயங்களைப் பொறுத்தவரை 'குற்றம் நடந்திருக்க வாய்ப்பு தான் தற்போது மிக அதிகம்' என்று விசாரணை அதிகாரிகள் மதிப்பீடு செய்துள்ளனர். முதற்கட்ட உடற்கூறு பரிசோதனையில் மரணக் காரணம் உறுதி செய்ய முடியவில்லை. உடல் கடுமையாக அழிந்த நிலையில் இருந்தது. எனினும் அண்மையில் செய்யப்பட்ட செயல்முறை நுட்ப விசாரணைகள் சில முக்கிய தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன.
அகாததே ஹிலரே அணிந்திருந்த ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் தரவுகள் படி மரணத்திற்கு முன் அவரது இதயத் துடிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இது அச்சம் அல்லது போராட்டத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
GPS தரவுகள் காட்டியபடி, அவர் இறந்த இடமும், உடல் கண்டெடுக்கப்பட்ட இடமும் நூறு மீட்டர் தூரங்கள் வேறுபட்டது. இது கொலைக்குப் பின்னர் அது இடம் மாற்றப்பட்டிருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது
மேலும் உடல் கிடைத்த நிலை இயற்கை மரணம். அல்லது தவறி வீழ்ந்து இறப்பதற்கும் பொருந்தாத வகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அகர் ஹிலரே ஓட்டப்பந்தயத்தை நேசிப்பவராக இருந்தார். ஸ்ட்ராவா (Strava) என்ற செயலியில்இ 15 முதல் 20 கிலோமீட்டர் வரை ஒவ்வொரு ஓட்டத்தையும் பதிவிட்டுவந்திருந்தார்.
தற்போதுஇ 'கொலைக்கான விசாரணை' ஒரு முக்கிய தடயமாக மாறி வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan