ஒலிம்பிக் பலூன் - மீண்டும் வருகிறது!!

21 ஆனி 2025 சனி 07:00 | பார்வைகள் : 3516
பரிசில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது பலரது கவனத்தை ஈர்த்த இராட்சத பலூன், இந்த கோடை காலத்தில் மீண்டும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
”La vasque olympique” எனும் இந்த இராட்சத பலூன், jardin des Tuileries
தோட்டத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இன்று ஜூன் 21 - சனிக்கிழமை முதல் செப்டம்பர் 14 ஆம் திகதி வரை மீண்டும் பறக்கவிடப்படும் என பரிஸ் நகரசபை அறிவித்துள்ளது. அத்தோடு, அடுத்த ஒலிம்பிக் போட்டி இடம்பெறும் வரை (லொஸ் ஏஞ்சல்ஸ் 2028) போட்டி இடம்பெறும் வரை ஒவ்வொரு ஆண்டு கோடை காலத்தில் அது ஏற்றப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
30 மீற்றர் உயரமும், 7 மீற்றர் விட்டமும் கொண்ட இந்த இராட்சத பலூன், சென்றவருடம் “பரிஸ் 24” ஒலிம்பிக் போட்டிகளின் போது பல இலட்சம் பேரது கவனத்தை ஈர்த்திருந்தது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், கடந்த ஜனவரி மாதத்தில்
”இந்த கோடைகாலத்தின் vasque olympique திரும்பி வரும்” என உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1