பரிஸ் : ஆற்றில்விழுந்த வெளிநாட்டு பெண்!!

20 ஆனி 2025 வெள்ளி 16:25 | பார்வைகள் : 3998
பரிசுக்கு சுற்றுலா வந்த பெண் ஒருவர் ஆற்றில் விழுந்துள்ளார். உயிருக்கு போராடும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று ஜூன் 19, வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் 16 ஆம் வட்டாரத்தின் Pont d'Iéna இல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண் ஒருவர், தனது நண்பர்களுடன் மேம்பாத்தில் நின்றிருந்த போது அவர் சென் நதியில் விழுந்துள்ளார். பத்து மீற்றர் உயரத்தில் இருந்து தண்ணீரில் விழுந்ததை அடுத்து, உடனடியாக மீட்புக்குழுவினர் அழைக்கப்பட்டனர்.
பின்னர் மீட்புக்குழுவினர் அப்பெண்ணை மீட்டனர். அவர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நண்பர்களுடன் நின்றிருந்த போது அவர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் எழுந்ததாகவும், அதை அடுத்தே அப்பெண் பாலத்தின் குறுகிய மதியில் ஏறி அங்கிருந்து ஆற்றில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர் போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1