இலங்கையில் தங்கியிருந்த 85 சீன பிரஜைகள் நாடு கடத்தல்
20 ஆனி 2025 வெள்ளி 13:38 | பார்வைகள் : 1710
இலங்கையில் தங்கியிருந்தபோது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீன நாட்டவர்கள் உள்ளூர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, வௌ்ளிக்கிழமை (20) அதிகாலையில் சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
உள்ளூர் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட இந்த சீன நாட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், பின்னர் அவர்களை நாடு கடத்தும் முடிவின் அடிப்படையில் வெலிசரவில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்த சீன நாட்டவர்கள் 05 பேருந்துகளில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி மேலும் கூறுகையில், இந்த விமானத்தில்உள்ளூர் காவல்துறை அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் சீன நாட்டவர்கள் குழுவுடன் பயணித்தனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-880 என்ற இந்த சிறப்பு விமானம், வௌ்ளிக்கிழமை (20) அன்று அதிகாலை 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் குவாங்சோவுக்குப் புறப்பட்டதை விமான நிலையப் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan