அவதானம்: Maître Coq நிறுவனத்தின் இறைச்சி திரும்ப பெறப்படுகிறது!!

19 ஆனி 2025 வியாழன் 16:41 | பார்வைகள் : 7088
பிரான்ஸ் முழுவதும் விற்பனையான Maître Coq நிறுவனத்தின் 350 கிராம் hachée à la dinde இறைச்சி மீண்டும் பெறப்படுகிறது.
இதில் சால்மொனெல்லா என்ற பக்டீரியா இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இது காய்ச்சல், வாந்தி, வயிற்று பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இந்த தயாரிப்பு ஜூன் 12 முதல் 18 வரை Leclerc, Intermarché, Coop U மற்றும் Auchan கடைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. lot எண் 25162 மற்றும் பார்கோடு 3230890051777.
நீங்கள் இந்த தயாரிப்பை உணவாக உண்ணாமல், கடைக்கு திருப்பி வழங்கலாம் அல்லது அழிக்கலாம். ஜூலை 4 வரை சலுகை கூப்பனாக பணத்தை திரும்ப பெற முடியும். மேலும் தகவலுக்கு: 02.51.44.23.53. என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1