கனடாவில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 15 வயது சிறுவர்கள் கைது

18 ஆனி 2025 புதன் 18:40 | பார்வைகள் : 1544
கனடாவின் ஹமில்டனில் வாகனத் திருட்டில் ஈடுபட்ட 11 மற்றும் 15 வயதான சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹமில்டன் பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
நயாகரா பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பொன்றின் வாகனத் தரிப்பிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
ஒரு 2015 வெள்ளை நிறமுடைய செல்வர்டொ சில்வெர்டோ Chevrolet Silverado மற்றும் ஒரு 2015 வெள்ளை ஜீப் Jeep Cherokee வாகனங்களின் சாவிகளை திருடி வாகனங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
ஆபத்தான முறையில் வேகமாக வாகனங்கள் செலுத்தப்படுவதாக கிடைக்க்ப பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்திய போது இரண்டு வாகனங்களும் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருட்கள் சிறிதளவு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1