அணு விஞ்ஞானிகள், இராணுவ தளபதிகள் உட்பட 585 பேர் பலி! ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்

18 ஆனி 2025 புதன் 14:02 | பார்வைகள் : 2056
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 585 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வந்த சூழலில், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 13ஆம் திகதி அதிகாலை ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்தன.
இதற்கு பதிலடி தாக்குதலாக ஈரானும் களத்தில் இறங்க, இரு தரப்பிற்கும் இடையே போர்பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சூழலில் போர் தொடங்கியுள்ளதாக ஈரானின் உயர் தலைவரான ஆயத்துல்லா அலி காமெனி பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அணு விஞ்ஞானிகள், இராணுவ தளபதிகள் உட்பட 585 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட தகவல்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் 585 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1326 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1