ஈரானில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு மக்கள்! - தொடர்பு துண்டிப்பு!!
18 ஆனி 2025 புதன் 12:02 | பார்வைகள் : 7411
ஈரானில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு நபர்கள் தொடர்பில் தகவல்கள் எதனையும் பெறமுடியாமல் உள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலினால் அங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு நபர்களான Cécile Kohler மற்றும் Jacques Paris ஆகியோர் குறித்து தகவல்கள் எதனையும் பெறமுடியாமல் உள்ளதாகவும், அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனும் அச்சம் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Cécile Kohler மற்றும் Jacques Paris ஆகிட்ய இருவரும் ஈரானுக்கு சுற்றுலா சென்ற நிலையில், ஈரானை உளவு பார்ப்பதாக சந்தேகித்து 2022 ஆம் ஆண்டு மே 7 ஆம் திகதி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர், டெஹ்ரான் மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். சிறைக்கைதிகள் இடமாற்றப்படுகிறார்களா என்பது தொடர்பில் சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில், குறித்த இரு பிரெஞ்சு நபர்கள் தொடர்பிலும் அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan