முதன் முறையாக மனித உரிமை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் La Poste!!
17 ஆனி 2025 செவ்வாய் 15:47 | பார்வைகள் : 5154
பிரான்ஸில் பெரிய நிறுவனங்கள் மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களைத் தடுக்க “நிதானக் கடமை” (devoir de vigilance) சட்டத்தின் கீழ் கடமைப்பட்டுள்ளன.
La Poste நிறுவனம், சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க, அதன் செயல்பாடுகள் தொடர்பாக தீவிர நிதானக் திட்டம் வகுக்காததால், 2025ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி, பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளது.
La Poste நிறுவனம், 2021ல் தயாரித்த திட்டத்தில் தெளிவான அபாய வரைபடம் இல்லாததால், 2023ல் தண்டிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு 2025ம் ஆண்டு மேன்முறையீட்டில் இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முக்கியமாக, TotalEnergies, BNP Paribas, மற்றும் Casino போன்ற பன்னாட்டுக் கழகங்களும் இத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் தலையீடு செய்யப்பட்டாலும், La Poste நிறுவனம் இந்த 2017 சட்டத்தின் அடிப்படையில் முதல்முறையாக தண்டிக்கப்பட்ட ஒரே நிறுவனம் ஆகும்.
2021ஆம் ஆண்டில் La Poste நிறுவனம் தயார் செய்த நிதானத் திட்டம், சட்டப்படி தேவையான துல்லியத்துடன் இல்லை என்பதே காரணமாகும்.
La Poste நிறுவனத்தின் 2.3 லட்சம் ஊழியர்களில் 22.7% பேர் வெளிநாடுகளில் உள்ளனர். இந்நிறுவனம், தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, “சமநிலையான சட்டப் பயன்பாடு” வேண்டும் என வாதிட்டது.
சட்டத்தின் அடிப்படையில், இத்தகைய நிதானத் திட்டம் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிந்து, மதிப்பீடு, கண்காணிப்பு மற்றும் அலாரம் முறைகள் அடங்கியதாக இருக்க வேண்டும். La Poste, பழைய திட்டத்திற்கான தீர்ப்பு தற்போதைய முன்னேற்றங்களை பிரதிபலிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan