"பொதுமக்கள் மீது தாக்குதலை நிறுத்துங்கள்!” - மக்ரோன் வலியுறுத்தல்!!

17 ஆனி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 2613
இஸ்ரேல் - ஈரான் மோதல்கள் நாளுக்கு நாள் வலுத்துவரும் நிலையில், மக்கள் குடியிருப்பின் மீது தாக்குதல் மேற்கொள்ளுவதை நிறுத்துங்கள் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று ஜூன் 16, திங்கட்கிழமை G7 மாநாட்டில் கலந்துகொண்டிருந்த மக்ரோன், அங்கு வைத்தே இதனைக் குறிப்பிட்டார். “இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா போர்நிறுத்தத்தை கொண்டுவரமுடியும். அது ஒரு நல்ல செயலாக இருக்கும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை இரு தரப்பும் கைவிடவேண்டும்!” என மக்ரோன் வலியுறுத்தினார்.
நேற்று ஐந்தாவது நாளாக இஸ்ரேல்-ஈரான் மோதல் இடம்பெற்று வருகிறது. இரு தரப்பிலும் பெரும் சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1