இந்திய பெருங்கடலில் பிரித்தானிய போர்க்கப்பலை இடைமறித்த ஈரான் கடற்படை
15 ஆனி 2025 ஞாயிறு 18:57 | பார்வைகள் : 3019
இந்திய பெருங்கடலில் பிரித்தானியாவின் போர்க்கப்பலை ஈரான் கடற்படை தடுக்க முயன்றுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலைமை மோசமாகிவரும் சூழலில், ஈரான் கடற்படை, இந்தியப் பெருங்கடலில் பிரித்தானியாவின் destroyer யுத்தக் கப்பல் ஒன்றை தடுத்து நிறுத்தியதாக IRNA செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் குறித்து, ஈரானின் முதல் கடற்படை மண்டலத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அறிக்கையொன்றை வெளியிட்டார்.
அதில், “வெள்ளிக்கிழமை இரவிலேயே பிரித்தனைய கப்பலை நமது நவீன உளவுத்துறை கருவிகள் கண்டறிந்தன. அது இஸ்ரேலிய மிசைல் ஒன்றை ஈரானில் நோக்கி வழிநடத்த முயன்றது” என்றார்.
ஈரான், போர்த்திறன் ட்ரோன்கள் மூலம் எச்சரித்ததும், அந்தக் கப்பல் பெர்சியக் வளைகுடா நோக்கி செல்லும் முயற்சியை நிறுத்தி, பாதையை மாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரானின் ராணுவ, அணுசக்தி மையங்களை தாக்கிய பிறகு, நிலைமை மிகவும் பதட்டமாகியுள்ளது. இதனால் இரு நாடுகளும் போர் மோதலுக்கு மிக அருகில் உள்ளன.
இதனிடையே, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், மேற்காசிய பகுதிக்குள் கூடுதல் போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் Tanker விமானங்கள் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளார்.
பிரித்தானியாவிற்கு ஏற்கனவே, ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக போர்விமானங்கள் உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு புதிய ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan