கொழும்பில் மின்னுயர்த்தியில் சிக்கி இளைஞன் மரணம்

15 ஆனி 2025 ஞாயிறு 10:08 | பார்வைகள் : 1529
மொரட்டுவை நடு (மெத) வீதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவர், ஹோட்டலில் உள் வேலைக்குப் பயன்படுத்தப்படும் மின்னுயர்த்தியில் (லிஃப்டில்) சிக்கி உயிரிழந்துள்ளார் என மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் ரவிந்து பீரிஸ் (19) என்ற இளைஞர் ஆவார், அவர் பாணந்துறை, அருக்கொடவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நாளில் நான்கு மாடி ஹோட்டலின் மேல் தளத்திற்கு கோப்பைகள் மற்றும் தட்டுகளை எடுத்துச் சென்றபோது லிஃப்ட் அவர் மீது சரிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1