குழந்தை பராமரிப்பு உதவித்தொகை 12 வயது வரை நீட்டிப்பு!!
.jpg)
12 ஆனி 2025 வியாழன் 14:49 | பார்வைகள் : 5998
தனிபெற்றோரை கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் குழந்தைப் பராமரிப்பு உதவி தொகையானது (Le complément du libre choix du mode de garde-CMG), 2025 செப்டம்பர் 1 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்காக நீடிக்கப்படவுள்ளது.
இதுவரை 6 வயது வரை மட்டுமே இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி, வருமான அடிப்படையில், கிரேச் (crèche) அல்லது குழந்தை பார்க்க வேலைக்கு வைத்திருப்போருக்கான செலவுகளுக்குப் பகுதி ஆதரவாக வழங்கப்படுகிறது.
மாற்று வதிவிடத்தில் வாழும் குழந்தைகளுக்காக,(résidence alternée) சந்தர்ப்பத்தில், இரு பெற்றோர்களும், தகுதியுள்ளவர்களாயின், தனியாக உதவிக்குரியவர்களாக அங்கீகரிக்கப்படலாம். இது 2025 டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும்.
மேலும், இந்த உதவிக்கான கணக்கீடு முறை மாற்றப்படவுள்ளது. அது பெற்றோர்களின் வருமானம், குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் பராமரிப்பு நேரத்தைக் கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்படவுள்ளது.
குறைந்த வருமானம் மற்றும் அதிக பராமரிப்பு தேவையுள்ள குடும்பங்களுக்கு அதிக ஆதரவு வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு மாதம் €2000 வருமானமுள்ள குடும்பம், இப்போது €350 செலவழிக்க வேண்டியிருந்தால், புதிய முறையில் அது €200 ஆகக் குறையும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1