Shienஇன் போலி சமூக வலைதள கணக்குகளும் உண்மையற்ற ஆதரவும்!!
11 ஆனி 2025 புதன் 15:23 | பார்வைகள் : 3886
சீனாவின் விரைவான பஷன் நிறுவனம் Shein, பிரான்சில் தனது பெயரை காப்பாற்ற சமூக வலைதளங்களில் ஒரு பெரிய ஊடகத் தந்திரத்தை நடத்தியுள்ளது.
மகாலி பெர்தா (Magali Berdah) என்பவருடன் இணைந்து, சமூக வலைதளங்களில் பல காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்கும் சட்டத்திற்கு எதிராக Shein-ன் பாதுகாப்பு வாதங்களை விளக்கியுள்ளன.
இதன் பின்னணியில், சுமார் 2,000 போலி சமூக வலைதள கணக்குகள் இயக்கப்பட்டு, AI உருவாக்கிய படங்கள் மற்றும் ஒரே மாதிரியான கருத்துகளுடன் 31,000-க்கும் மேற்பட்ட பதில்கள், லைக்குகள் பதிவிடப்பட்டுள்ளன.
பல கணக்குகள் July 2024-இல் உருவாக்கப்பட்டவை, மற்றும் “பஷன் என்பது உரிமை” என்ற வாசகத்துடன் உண்மையான இன்ப்ளூவன்சர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளன. ஆனால் இவை போலியானது என்பது கணக்குகளின் மாதிரிகளால் வெளிப்பட்டுள்ளது.
Shein இந்த விடயத்தில் தங்களுக்கு எந்த தொடர்புமில்லை என மறுத்துள்ளது மற்றும் இது உண்மையான மக்கள் குரல்களை ஒடுக்க முயலும் சூழ்ச்சி எனவும் கூறியுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan