Sheinஇன் வேகமான பேஷனை கட்டுப்படுத்தும் பிரான்ஸ் அரசு!!
10 ஆனி 2025 செவ்வாய் 20:20 | பார்வைகள் : 4632
விரைவான பேஷனை கட்டுப்படுத்தும் நோக்கில், Shein போன்ற நிறுவனங்களை குறிவைக்கும் ஒரு சட்ட முன்மொழிவு செனட் சபையில் ஒருமனதாக ஜூன் 10ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பும், உள்ளூர் வணிக வளர்ச்சியும் என்ற இரு நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது அமுலுக்கு வர, நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் அதே நேரத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துக்காக அனுப்பப்படும்.
Shein நிறுவனம், நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதிய ஆடைகளை வெளியிட்டு, பாரம்பரிய பேஷன் நிறுவனங்களை விட அதிக விற்பனை செய்துவருகிறது. இதனால், இது ஒரு பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார சவாலாக மாறியுள்ளது.
புதிய சட்டம் மூலம், மாசுபாட்டுக்காக அபராதம், விளம்பரத் தடை, இன்ப்ளுவென்சர்களுக்கு கட்டுப்பாடுகள் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அரசு மற்றும் செனட், இந்த விரைவான பேஷனை கட்டுப்படுத்தி, உள்ளூர் ஆடை துறையை பாதுகாக்க விரும்புகின்றன.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan