நோஜென்ட் பள்ளியில் மாணவனால் குத்துப்பட்டுக் கொல்லப்பட்ட மெலனி G. யார்?
10 ஆனி 2025 செவ்வாய் 19:10 | பார்வைகள் : 8824
இன்று (ஜூன் 10, செவ்வாய்), ஹாட்-மார்னே மாவட்டத்தின் நோஜென்ட்டில் உள்ள பிரான்சோயிஸ் டோல்டோ பள்ளியின் முன்பாக, 14 வயது மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு 31 வயது கல்வி உதவியாளர் Mélanie G. கொல்லப்பட்டார்.
மெலனி G. ஒரு சிறுவனின் தாய் எனவும், இவர் 2024-இல் இந்த பள்ளியில் பணியில் சேர்ந்தார் எனவும், கூறிய அவரது மைத்துனி, மெலனி முன்பு இதே பகுதியில் சிகையலங்காரம் செய்பவராகப் பணியாற்றினார் எனவும் ஊடகங்களிற்குத் தெரிவித்துள்ளார்.
குரோன் நோய் (Crohn's disease) என்ற வயிற்று அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதால், அவர் தனது தொழிலை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.
'அவர் ஒரு கல்வி உதவியாளராக மாறினார், மேலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவும் AESH (Accompagnant d'Élèves en Situation de Handicap) பணிக்கும் விண்ணப்பித்திருந்தார். அவர் தனது பணியை மிகவும் விரும்பினார், மாணவர்களிடம் மிகவும் பிடித்தவராக இருந்தார்' என்றும் கொல்லப்பட்ட மெலானி குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோஜோன் மக்களும் மெலனியை 'எப்போதும் புன்னகைத்த முகமும், இனிமையானவரும்' என்று விவரிக்கின்றனர்.
அவர் 'வெளியே செல்வது, வாழ்வது மற்றும் விழாக்களை ரசிப்பது' போன்றவற்றை விரும்பினார்.
மெலனி தனது பேஸ்புக்கில், மார்ச் 4-ல் நடந்த பள்ளி கார்னிவால் விழாவின் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அந்தப் படங்களில், மாணவர்களால் சூழப்பட்டு புன்னகைத்துக் கொண்டிருக்கும் அவரது முகம் தெரிகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
21 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan