துயரத்தில் கலந்து கொள்ளும் தேசம் - எமானுவல் மக்ரோன்!

10 ஆனி 2025 செவ்வாய் 16:03 | பார்வைகள் : 2745
“நோஜோனில் (Nogent) நமது குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு கல்வி உதவியாளர், அதீத வன்முறையில்; பலியாகியுள்ளார். அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் கல்வி சமூகத்தினர் அனைவருடனும் நாம் எமது அனுதாபத்தைப் பகிர்ந்து கொள்கின்றோம். இந்த துயரத்தில் தேசம் கலந்து கொள்கிறது குற்றத்தை எதிர்க்க அரசாங்கம் முழு முனைப்புடன் செயல்படுகிறது”
என்று குடியரசுத் தலைவர் எம்மானுவேல் மாக்ரோன் தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Haute-Marne மாவட்டத்தின் நோஜோனில் உள்ள ஒரு கல்லூரியின் முன்பாக, பையை சோதனை செய்யும் போது, 31 வயது கல்வி உதவியாளர் இனறு செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கத்தியால் குத்தப்பட்டார். அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சைகளின்றிப் பலியாகியுள்ளார்.
இதன் எதிரொலியாகவே மக்ரோன் மேற்கண்ட செய்தியை வழங்கி உள்ளார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1