அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம்
10 ஆனி 2025 செவ்வாய் 13:40 | பார்வைகள் : 6925
போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன.
போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை பொலிஸாரை அனுப்பி வைத்து டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் அதிபர் டிரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னியா கவர்னர் உள்ளூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனாலும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான அமெரிக்க கடற்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
700 கடற்படையினர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வடக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்படையினர், ஏற்கனவே அங்குள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் ஆகியோர், கடற்படையினரின் வருகை தேவையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan