Caf உதவி பெறுபவர்களின் அடையாளங்கள் திருடப்பட்டு €166 மில்லியன் மோசடி!!
9 ஆனி 2025 திங்கள் 23:14 | பார்வைகள் : 5795
2024ஆம் ஆண்டில், CAF மிகப்பெரிய அளவிலான மோசடிகளை எதிர்கொண்டுள்ளது. மொத்தமாக, 166 மில்லியன் யூரோக்கள் இழப்பு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இது பிரான்ஸிலும், வெளிநாடுகளிலும் CAF உவி பெறுபவர்களின் அடையாளம்கள் களவாடப்பட்டு மோசடிகளை எதிர்கொண்டு வருகிறது. 2024ஆம் ஆண்டில் மட்டும் மொத்த மோசடிகளில் மூன்றில் ஒரு பகுதி, CAF மோசடிகள் மட்டும் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு, காவல் துறையினர் ஒரு நபரை கைது செய்துள்ளனர். அவர் மூன்று ஆண்டுகள் நீடித்த ஒரு பெரிய அளவிலான மோசடிக்கு பொறுப்பாளியாக இருந்துள்ளார். அவர் ஐக்கிய அரபு நாடுகள், தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மறைந்திருந்துள்ளார்.
மேலும், அவர் 74 நபர்களின் அடையாளங்களை களவாடி, RSA காகிதங்களை தயார் செய்துள்ளார். இதில் அவருடைய தந்தை, பிரான்ஸில் இருந்து முக்கியக் கூட்டாளியாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் சேர்ந்து 177,000 யூரோக்களை மோசடி செய்துள்ளார்கள்.
CAF தற்போது 43 பேரை பணியமர்த்துவதோடு, AI தொழில்நுட்பத்தையும் எதிர்வரும் மாதங்களில் பயன்படுத்துவதன் மூலம் மோசடிகளை தடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan