கடை மூடிய பிறகு கொள்ளை முயற்சி: இரு இளைஞர்கள் கைது!

9 ஆனி 2025 திங்கள் 21:07 | பார்வைகள் : 8249
Yvelines பகுதியின் சர்த்ரூவில்லில் (Sartrouville) உள்ள கபூர் (Carrefour) கடையில் சனிக்கிழமை இரவு திருடுவதற்காக, இரு இளம் திருடர்கள் (17 மற்றும் 19 வயது) கடையில் மறைந்து இருந்துள்ளனர்.
அவர்கள், பாதுகாப்பு ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினரால் குடோன் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் அவர்களிடம் இருந்து, ஒரு குறட்டையும் பறிமுதல் செய்துள்ளனர். இதில் 19 வயதுடையவர் முன்னதாகவே காவல்துறைக்கு பரிச்சயமானவர், மற்றவர் முதன்முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் இருவரும் கடை திறந்திருக்கும் போது உள்ளே சென்றுவிட்டு, மூடப்பட்ட பிறகு கையிருப்பில் இருந்து பொருட்களை திருடத் தொடங்கியுள்ளனர்.
இதுபோன்ற கொள்ளை முறை 2016இல் பல Carrefour கடைகளில் நிகழ்ந்துள்ளது. காவல்துறையினர் d’Évry (Essonne), Noisy-le-Grand (Seine-Saint-Denis) மற்றும் de Gennevilliers (Hauts-de-Seine) பகுதிகளில் உள்ள கபூர் கடைகளை கண்காணித்து, பல ஆயிரம் யூரோக்கள் மதிப்புமிக்க கணினி உபகரணங்களை திருடியதற்காக இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1