இயக்குனர் அருண்குமார் கமல்ஹாசனுடன் இணைகிறாரா?

8 ஆனி 2025 ஞாயிறு 16:42 | பார்வைகள் : 1804
சமீபத்தில் ’வீர தீர சூரன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அருண்குமார், அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தின் ஒப்பந்தம் கூட கையெழுத்தாகிவிட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடித்த ’பண்ணையாரும் பத்மினியும்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அருண்குமார். அதன் பின்னர் ’சேதுபதி’, ’சிந்துபாத், ’வீர தீர சூரன் 2’ ஆகிய படங்களை இயக்கிய நிலையில், ’வீரதீர சூரன்’ படத்தின் முதல் பாகத்தை விரைவில் அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கி கொடுக்க அருண்குமார் ஒப்புக் கொண்டு இருப்பதாகவும், இந்த படத்தில் கமல் நடிக்கவில்லை என்றும், வேறொரு ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
’வீர தீர சூரன்’ படத்தின் முதல் பாகத்திற்கு முன்பே இந்த படத்தை முடித்துவிடுவார் என்றும், இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும், விரைவில் ஹீரோ மற்றும் ஹீரோயின்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1