பரிசில் விளாடிமிர் புட்டினின் “ரகசிய மகள்!”
7 ஆனி 2025 சனி 20:53 | பார்வைகள் : 3718
விளாடிமிர் புட்டினின் ’மறைக்கப்பட்ட மகள்’ என சந்தேகிக்கப்படும் இளம் பெண் ஒருவர் பரிசில் புனைபெயருடன் வசித்து வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
22 வயதுடைய Luiza Rozova எனும் பெயரின் அவர் பரிசில் பல ஆண்டுகளாக வசிக்கிறார் எனவும், அவர் சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகே உள்ள ICART ரஎனும் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவர் பரிசின் புறநகரான belleville இல் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் அண்மையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். அவர் பணியில் இணைந்ததை அடுத்து அவரது பெயர் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
20 வருடங்களுக்கு முன்னர் அவரது தயார் புட்டினைச் சந்தித்ததாகவும், சாதாரண துப்பரவு தொழிலாளியான தாயார் ரஷ்யாவின் பில்லியனர்களில் ஒருவராக மாறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Luiza Rozova இன் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் மறைக்கப்பட்டுள்ளது.
யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யாவின் போரை எதிர்த்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
2020 ஆம் ஆண்டு Proekt Media எனும் ஊடகம் Luiza Rozova புட்டினின் மகள் என்பதை சில ஆதாரங்களோடு வெளியிட்டது.
புட்டினின் வாழ்க்கையை ரகசியமாக ரஷ்யா பேணுவதால், இது தொடர்பில் எவ்வித தகவல்களையும் புட்டின் தரப்பு ஆதரிக்கவோ மறுக்கவோ இல்லை.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan