விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!

7 ஆனி 2025 சனி 08:51 | பார்வைகள் : 2314
கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம்'' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த 11 ஆண்டுகளில் விசாயிகளுக்காக பா.ஜ., அரசு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவர்களது வாழ்வில் செழிப்பை உறுதி செய்துள்ளது.
கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு சேவை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியம். விவசாய துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். மண் வளம் மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
அவை பெரிதும் விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளன. விவசாயிகள் நலனுக்காக வரும் காலத்தில், எங்களது பணி தொடரும். விவசாயிகளின் கண்ணியம் மற்றும் செழிப்புக்காக நாங்கள் பணியாற்றி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1