உக்ரைன் பயன்படுத்திய அந்த மர்ம ஏவுகணை... அதிர்ச்சியில் இருந்து மீளாத ரஷ்யா
7 ஆனி 2025 சனி 07:24 | பார்வைகள் : 3931
ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்கொள்ள உக்ரைன் பயன்படுத்திய மர்ம ஏவுகணை தொடர்பில் விளாடிமிர் புடின் அதிர்ச்சியில் உறைந்திருப்பார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் பிரையன்ஸ்கில் அமைந்துள்ள விமான நிலையமொன்றை ஒரு பெரிய தாக்குதல் மொத்தமாக சிதைத்துள்ளதாகவும், புடினின் இஸ்கந்தர் ஏவுகணை அமைப்பின் இருப்பிடத்தை அழித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த வார இறுதியில் உக்ரைன் முன்னெடுத்த ஆபரேஷன் ஸ்பைடர்வெப் ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த நிலையில், விளாடிமிர் புடினுடன் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டது போன்று ரஷ்யா மிக மோசமானத் தாக்குதலை முன்னெடுத்தது.
407 ட்ரோன்கள் மற்றும் 44 ஏவுகணைகளால் உக்ரைன் தலைநகரை ரஷ்யா உலுக்கியது. இதில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
ஆனால் துணிச்சல் மிகுந்த உக்ரைன் தங்கள் பாணியில் தக்க பதிலடி கொடுத்தது. இதில் தற்போது உக்ரைன் பயன்படுத்தியுள்ள அந்த மர்ம ஏவுகணை குறித்தே பெரும் விவாதம் எழுந்துள்ளது.
ரஷ்ய தரப்பு இதுவரை எதிர்கொண்டிராத தாக்குதல் இதுவென்றே கூறுகின்றனர். இதனிடையே ரஷ்ய ஆதரவு ஊடகம் ஒன்று குறிப்பிடுகையில், உக்ரைன், ஜேர்மனி வழங்கிய சக்திவாய்ந்த டாரஸ் ஏவுகணையை பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளது.
இன்னொரு ரஷ்ய ஆதரவு ஊடகம் தெரிவிக்கையில், பிரையன்ஸ்க் மீதான தாக்குதல் மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட நீண்ட தூர ஏவுகணைகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது. அது ஜேர்மனியின் Taurus ஏவுகணையாக இருந்தால், உக்ரைன் இதைப் பயன்படுத்திய முதல் சந்தர்ப்பமாக இது இருக்கும்.
மட்டுமின்றி, வெள்ளை மாளிகையில் ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ட்ரம்பை சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் சந்தித்த 24 மணி நேரத்தில் ரஷ்யா மீது ஜேர்மன் ஆயுதத்தை உக்ரைன் பயன்படுத்தியுள்ளது.
மே மாத இறுதியில் மெர்ஸ் அறிவித்திருந்தார், ஜேர்மனி உட்பட உக்ரைன் ஆதரவு நாடுகளான பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகியோர் அளித்துள்ள ஆயுதங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனால் பிரித்தானியாவின் சக்திவாய்ந்த Storm Shadow ஏவுகணையும் உக்ரைன் தரப்பால் மிக விரைவில் பயன்படுத்தக் கூடும்.
800,000 பவுண்டுகள் மதிப்பிலான Storm Shadow ஏவுகணையை உக்ரைனுக்குள் ஏற்கனவே ஜெலென்ஸ்கி பயன்படுத்தியுள்ளார். ஜேர்மனியின் Taurus ஏவுகணையும் பிரித்தானியாவின் Storm Shadow ஏவுகணைக்கு சமமானது என்றே கூறப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
20 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan