விபத்தை படம் பிடித்த 109 ஓட்டுநர்களுக்கு அபராதமும் புள்ளி குறைப்பும்!!
6 ஆனி 2025 வெள்ளி 19:31 | பார்வைகள் : 8485
வியாழக்கிழமை Drôme பகுதியில் A7 பாதையில் ஒரு லாரி கவிழ்ந்ததை வீடியோ எடுக்கவோ புகைப்படம் எடுக்கவோ தங்கள் கைபேசியைப் பயன்படுத்திய 109 வாகன ஓட்டிகளுக்கு தலா 135 யூரோ அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமையில் மூன்று புள்ளிகள் குறைப்பை எதிர்நோக்குகின்றனர்.
அவர்கள் வாகனங்களை நிறுத்தாமல், இலக்கப்பலகையை பதிவு செய்து “verbalisation à la volée” எனும் முறையில் அபராதம் அனுப்பப்படும் என பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறை ஓட்டுநர்களுக்கே பொருந்தும்; பயணிகள் இதில் பாதிக்கப்பட மாட்டார்கள். விபத்து La Roche-de-Glun பகுதியில் நடந்துள்ளது. லாரி ஓட்டுநர் தூக்கத்தில் கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சாலையை சுத்தம் செய்யும் பணிகள் பல மணி நேரம் எடுத்துக்கொண்டதால், இரு திசைகளிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 15 நாட்களில் அபராதம் செலுத்தினால் அது 90 யூரோவாக குறைக்கப்படும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan