பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
6 ஆனி 2025 வெள்ளி 16:02 | பார்வைகள் : 2421
பாகிஸ்தான் மனித குலத்திற்கு எதிரானது என காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து பிறகு பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலம் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். கத்ராவில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த சின்னங்கள். நமது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். சுற்றுலாத்துறையில் பல்வேறு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
மனிதகுலம்
துரதிர்ஷ்டவசமாக, நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவிற்கும் எதிராக செயல்படுகிறது. ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்படும் ஒரு நாடு பாகிஸ்தான். இதற்கு ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.
கலவரங்கள்
பஹல்காம் சம்பவம் இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.
பாக்., செய்த சதி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காஷ்மீரிகளின் வருமானத்தைத் தடுக்க பாகிஸ்தான் செய்த சதி செயலாகும். செனாப், அஞ்சி பாலங்கள் காஷ்மீரில் செழிப்புகளை கொண்டு வரும். காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயிலில் பயணம் தற்போது நிஜமாகிவிட்டது.
வந்தே பாரத் ரயில் சேவை
மாதா வைஷ்ணவ தேவியின் ஆசிர்வாதத்துடன், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ரயில் சேவை கொண்டுவரப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்பு, செனாப் பாலம் மற்றும் அஞ்சி பாலத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்று, ஜம்மு-காஷ்மீர் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில்களைப் பெற்றுள்ளது. ஜம்முவில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி திட்டங்கள்
ரூ.46,000 கோடி மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் முன்னேற்றத்திற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த புதிய வளர்ச்சிக்கு உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan